
தூத்துக்குடி: தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை(ஜன.13) வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கையான ஸ்ருதி என்பவர் தேர்வானார்.
தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை இவர் ஆவார். இவருக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மேலகரந்தை கிராம உதவியாளர் பணிக்கான, பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ)மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.