புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காங்கிரஸ் எம்.பி. மரணம்: ஒற்றுமை நடைப்பயணம் ஒத்திவைப்பு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சனிக்கிழமை காலை பங்கேற்ற அக்கட்சியின் எம்.பி. சௌதரி சந்தோக் சிங் மரணமடைந்தார்.

News image

காங்கிரஸ் எம்.பி. மரணம்: ஒற்றுமை நடைப்பயணம் ஒத்திவைப்பு

Updated On :14 ஜனவரி 2023, 9:38 am

DIN


ஜலந்தர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சனிக்கிழமை காலை பங்கேற்ற அக்கட்சியின் எம்.பி. சௌதரி சந்தோக் சிங் மரணமடைந்தார்.

நடைப்பயணத்தின்போது, திடீரென மயங்கி விழுந்த சந்தோக் சிங், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தோக் கிங் மறைவைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமை நடைப்பயணம் அடுத்த 24 மணிநேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகலில் ஜலந்தர் அருகே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தலைமையிலான நடைப்பயணம் சனிக்கிழமை காலை லதோவால் பகுதியிலிருந்து தொடங்கியது. கொராயா நோக்கி நடைப்பயணம் சென்று கொண்டிருந்த போது திடீரென சந்தோக் சிங் மயங்கி விழுந்து பலியானார். அவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து நடைப்பயணத்திலிருந்து பாதி வழியிலேயே ராகுல் புறப்பட்டுச் சென்றார். அவர் ஜலந்தரில் உள்ள சந்தோக் இல்லத்துக்கு விரைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.