டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பத்திரிகையாளர்கள் ‘கர்மயோகிகள்’: ராஜ்நாத் சிங்

கரோனா காலகட்டத்தின்போது பத்திரிகையாளர்கள் கர்மயோகிகள் போல் செயல்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

News image
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
Updated On :15 ஜனவரி 2023, 3:59 pm

DIN

கரோனா காலகட்டத்தின்போது பத்திரிகையாளர்கள் கர்மயோகிகள் போல் செயல்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தேசிய வாராந்திர பத்திரிகையான ‘பஞ்சன்யா’-வின் 75 வது ஆண்டு விழா தில்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாட்டினார்.

அப்போது, ‘நாட்டில் ஆசிரியர்களுக்கு இணையான மதிப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. நேர்மை, உண்மை ஆகியவற்றை பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டும். போட்டிக்காக தவறான செய்திகளை வெளியிடக் கூடாது. ஊடகங்கள் அரசை விமர்சிக்கக் கூடாது என சொல்லவில்லை. ஆனால், விமர்சிக்க வேண்டும் என்பதற்காகவே விமர்சிப்பது சரியல்ல. நாட்டில் ஊடகங்களின் பணி முக்கியமானது. கரோனா காலகட்டத்தில் பத்திரிகையாளர்கள் கர்மயோகிகள்போல் செயல்பட்டனர். ஊடகத்துறை நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முக்கியமான தூண்.’ எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.