
தானேவில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை காவல் துறையினர் இன்று (ஜனவரி 15) கைது செய்தனர்.
தகவலின் அடிப்படையில் ரிவால்வர் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததாக 2 பேரை தானே நகர காவல் துறையினர் இருவரை கைது செய்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆயுதச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் விசாரனை நடைபெற்று வருகிறது.