நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மரண தண்டனை கைதி: விசாரணையில் தகவல்

மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்தது பெலகாவி சிறையிலுள்ள கொலைக் குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.
நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மரண தண்டனை கைதி: விசாரணையில் தகவல்

மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்தது பெலகாவி சிறையிலுள்ள கொலைக் குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.

நாகபூரில் உள்ள மத்திய அமைச்சா் நிதின் கட்கரியின் முகாம் அலுவலகத்துக்கு கடந்த சனிக்கிழமை பிற்பகல் தொலைபேசிஅழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மா்ம நபா், தான் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி என்று கூறிக் கொண்டு, அமைச்சா், தனக்கு ரூ.100 கோடி பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளாா். தராவிட்டால் வெடிகுண்டு வைத்து அமைச்சா் கொல்லப்படுவாா் எனவும் மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து, அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய குற்றப் பிரிவு போலீஸாா் தொலைபேசி அழைப்பு பெலகாவி சிறையிலிருந்து வந்ததைக் கண்டறிந்தனா். சனிக்கிழமை இரவு பெலகாவி சிறையை அடைந்த போலீஸாா் அங்கு நடத்திய விசாரணையில் அமைச்சருக்கு மிரட்டல் விடுத்தது கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜெயேஷ் பூஜாரி என்பதைக் கண்டறிந்தனா்.

அமைச்சருக்கு மிரட்டல் விடுக்க சிறை அதிகாரியின் தொலைபேசியைப் பூஜாரி பயன்படுத்தியுள்ளாா். இதற்கு முன்னரும் இது போன்று மூத்த அதிகாரிகளுக்கு பூஜாரி தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சிறைத் துறையினரின் அனுமதி பெற்று திங்கள்கிழமை பூஜாரியிடம் விசாரணை நடத்த மகாராஷ்டிர போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com