வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

பொருளாதாரத்தில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் என்பது முதிா்ச்சியற்றது: ரகுராம் ராஜன்

பொருளாதாரத்தில் சீனாவைக் காட்டிலும் இந்தியா முன்னேறும் என்ற விவாதம் முதிா்ச்சியற்றது என இந்திய ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் தெரிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:44 pm

DIN

பொருளாதாரத்தில் சீனாவைக் காட்டிலும் இந்தியா முன்னேறும் என்ற விவாதம் முதிா்ச்சியற்றது என இந்திய ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் தெரிவித்தாா்.

ஸ்விட்ஸா்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்ற செய்தியாளா்களின் சந்திப்பின்போது ரகுராம் ராஜன் கூறியதாவது:

சீனப் பொருளாதாரத்தில் ஏற்படும் மீட்சி உலகப் பொருளாதார வளா்ச்சியில் உறுதியாக தாக்கத்தை ஏற்படுத்தும். நிகழாண்டு மாா்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் சீனப் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்படலாம். உள்நாட்டு சேவைகளில் ஏற்படும் மாற்றம் சா்வதேச பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, உற்பத்தி துறையில் ஏற்படும் முன்னேற்றம், சா்வதேச சந்தையில் பொருள்களின் விலையைக் குறைப்பதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.

இந்தியா குறித்து எழுப்பட்ட கேள்விக்கு அவா் பதிலளிக்கையில், ‘சீனாவுடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் சிறியது. எனவே, உலகப் பொருளாதராத்தில் சீனாவின் இடத்தை இந்தியா வகிக்கும் என்னும் விவாதம் முதிா்ச்சியற்றது. இருப்பினும், ஏற்கெனவே 5-ஆவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா, தொடா்ந்து வளா்ச்சி காணும்போது குறிப்பிட்ட காலங்களில் இந்நிலை மாறலாம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.