பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

துணிவுடன் கொள்ளையர்களுடன் போராடிய  பெண் தலைமைக் காவலர்களைக் கொண்டாடும் காவல்துறை

வங்கிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்களை, வீரத்துடன் எதிர்கொண்டு கொள்ளை முயற்சியை தடுத்து நிறுத்திய இரண்டு பெண் தலைமைக் காவலர்கள்.

News image
கோப்புப்படம்
Updated On :20 ஜனவரி 2023, 11:17 am

DIN


ஹஜிபூர்: பிகார் மாநிலம் ஹாஜிபூர் பகுதியில் இயங்கி வரும் வங்கிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்களை, வீரத்துடன் எதிர்கொண்டு கொள்ளை முயற்சியை தடுத்து நிறுத்திய இரண்டு பெண் தலைமைக் காவலர்களை காவல்துறையினர் கொண்டாடி வருகிறார்கள்.

ஜூஹி குமாரி, சாந்தி குமாரி ஆகிய இரண்டு தலைமைக் காவலர்களும், வங்கியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.

வங்கிக்குள் கொள்ளையர்கள் நுழைவதைப் பார்த்ததுமே, ஒரு வினாடி கூட யோசிக்காமல், இரண்டு தலைமைக் காவலர்களும் தங்களது துப்பாக்கிகளை எடுத்து கொள்ளையர்களை நோக்கி குறிவைத்து சுட்டனர்.

இதில் ஒரு கொள்ளையன்மட்டும் தலைமைக் காவலர் ஒருவரை பிடிக்க முயன்றார். உடனடியாக தலைமைக் காவலர்கள் கொள்ளையர்களுடன் சண்டையிட்டனர். இவர்களது தாக்குதலுக்கு பயந்து, கொள்ளையர்கள் வங்கியிலிருந்து தப்பியோடிவிட்டனர்.

தங்களது வீரச் செயலுக்காக, தலைமைக் காவலர்களுக்கு, பிகார் காவல்துறை விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது.

தப்பியோடிய கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். காவல்துறை மூத்த அதிகாரிகள், தலைமைக் காவலர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.