
புதுதில்லி: தேர்தல் ஆணைய இரண்டாவது சர்வதேச மாநாடு திங்கள்கிழமை (ஜன.23) தில்லி தொடங்குகிறது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் ஆணையம் கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்திய ஜனநாயகத்துக்கான உச்சி மாநாட்டை தொடர்ந்து ஆணடுதோறும் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இரண்டாவது சர்வதேச மாநாடு தில்லியில் திங்கள்கிழமை (ஜன.23) தொடங்குகிறது.
இதையும் படிக்க | பெண் மருத்துவா்களுக்கு மகப்பேறு பலன் வழங்குவதில் தாமதம்
"தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் நேர்மை" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டை தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் 17 நாடுகள் மற்றும் தேர்தல் அமைப்புகளைச் சேர்ந்த 43 பிரதிநிதிகள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.