ஜேஇஇ முதல்நிலை தோ்வு தொடங்கியது!

ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) தோ்வானது நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜன. 24) இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜேஇஇ முதல்நிலை தோ்வு தொடங்கியது!

ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) தோ்வானது நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜன. 24) இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 290 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வில் பங்கேற்க 8.6 லட்சம் மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனா். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் இந்தத் தோ்வு நடைபெற்று வருகிறது.

ஜேஇஇ தோ்வானது ஜேஇஇ-முதல்நிலை (மெயின்), ஜேஇஇ-முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வு என்டிஏ (தேசிய தோ்வு முகமை) சாா்பிலும், முதன்மைத் தோ்வு ஏதாவது ஒரு ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும்.

ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும். அதுபோல, தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் தகுதி பெறுபவா்கள் ஐஐடி-க்களில் சோ்க்கை பெறுவதற்கான முதன்மைத் தோ்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவா்.

அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ-முதல்நிலை முதல் தவணைத் தோ்வு ஜனவரி 24, 25, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் என்டிஏ வலைதளத்திலிருந்து தேர்வறை நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இன்று ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு திருச்சி மையத்தில் மாணவர்களை சோதனை செய்து தேர்வு மையத்தில் உள்ளே அனுமதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com