தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜம்மு-காஷ்மீரில் கொட்டும் மழையில் தொடங்கியது ஒற்றுமை நடைப்பயணம்

கொட்டும் மழைக்கு இடையே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் பகுதியிலிருந்து தொடங்கி பனிஹால் நகரம் நோக்கி செல்கிறது.

News image
Updated On :25 ஜனவரி 2023, 10:51 am

PTI

ராம்பன்: கொட்டும் மழைக்கு இடையே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் பகுதியிலிருந்து தொடங்கி பனிஹால் நகரம் நோக்கி செல்கிறது.

ராம்பன் - பனிஹால் இடையேயான 270 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஜம்மு - ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த நடைப்பயணம் நடைபெறவிருக்கிறது. எந்த தட்பவெப்பநிலையிலும், நாட்டின் பிற பகுதிகளோடு ஜம்மு - காஷ்மீரை இணைக்கும் ஒரு சாலையாக இது அமைந்துள்ளது. 

கனமழை காரணமாக இந்தச் சாலைகளில் கற்கள் விழும் என்பதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

131வது நாளாக நடைபெற்று வரும் நடைப்பயணத்தில் தொடக்கத்தில் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்திருந்த ராகுல், கனமழை காரணமாக, கருப்பு நிற மழைக்கோட் அணிந்து கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.