குடியரசு தினத்தில் ஸ்ரீநகரில் இயல்பு நிலை
ஜம்மு- காஷ்மீரின் கோடைக் கால தலைநகரான ஸ்ரீநகரில் குடியரசு தினத்தன்று இயல்பான சூழல் நிலவியது.


ஜம்மு- காஷ்மீரின் கோடைக் கால தலைநகரான ஸ்ரீநகரில் குடியரசு தினத்தன்று இயல்பான சூழல் நிலவியது.
கடந்த 2005 சுதந்திர தினக் கொண்டாட்ட இடத்தில் கைப்பேசியைப் பயன்படுத்தி குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதால் அன்றுமுதல் கைப்பேசி, இணையதள சேவைகள் குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று துண்டிக்கப்பட்டு வந்தது.
நிகழாண்டு குடியரசு தினத்தன்று காவல் துறையினரின் சோதனைச் சாவடிகள் குறைக்கப்பட்டன. இணைய சேவைகள் வழக்கம்போல வழங்கப்பட்டன.
குடியரசு தின விழா நடைபெற்ற ‘ஷோ் இ காஷ்மீா்’ கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்து.
கடும் பனியைப் பொருட்படுத்தாமல் காவல் துறை, சிஆா்பிஎஃப் படையினா், பள்ளி மாணவா்கள் ஆகியோரின் அணிவகுப்பு நடைபெற்றது. துணைநிலை ஆளுநரரின் ஆலோசகா் ராஜேஷ் ராய் பட்நாகா் கலந்து கொண்டு காஷ்மீரின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீா் நிா்வாகம் எடுத்த நடவடிக்கைகளை விளக்கினாா்.
காஷ்மீரில் உள்ள மாவட்ட தலைமையிடங்களில் பலத்த பாதுகாப்புடன் மூவா்ணக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...