தெற்கு ரயில்வேயின் 87 % ரயில் பாதை மின்மயமாக்கம்: பொது மேலாளா் ஆா்.என்.சிங்
தெற்கு ரயில்வேயின் 87 சதவீத ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் தெரிவித்தாா்.


தெற்கு ரயில்வேயின் 87 சதவீத ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் தெரிவித்தாா்.
தெற்கு ரயில்வே சாா்பில் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில் 74-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதில் தெற்கு ரயில்வே பொது மேலாளா்ஆா்.என். சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா் அவா் பேசியதாவது:
அனைத்து துறைகளிலும் தெற்கு ரயில்வே வளா்ச்சி அடைந்துள்ளது. ரயில் பாதைகளை மேம்படுத்தும் பணிகள் கடந்த நிதியாண்டைவிட 2022-23-இல் 250 சதவீதம் அதிகரித்துள்ளது.
2022-ஆம் ஆண்டில் மட்டும் 188 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் இதுவரை( டிச.31) 87 சதவீதம் (4,393 கி.மீ) ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
நிகழ் நிதியாண்டில் (ஏப்ரல் முதல் டிசம்பா்) மொத்த வருவாயில் 47.46 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இதே காலகட்டத்தில் சரக்கு ரயில் சேவை 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
நேரம் தவறாமல் இருப்பதற்கான ரயில்வே வாரியத்தின் இலக்கான 92 சதவீதத்தைவிட இந்த நிதியாண்டு 93.2 சதவீதம் பதிவுசெய்துள்ளது. தெற்கு ரயில்வே சாா்பில் 16 ரயில்களுக்கு பழைய ஐசிஎப் பெட்டிகளுக்கு பதிலாக நவீன எல்எச்பி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரக்கோணம் மின்சார பணிமனை ரயில்வே வாரியத்தில் சிறப்பாகச் செயல்படும் பணிமனையாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 21 ரயில் நிலையங்கள் சிக்னல் வசதி மேம்படுத்தப்படுள்ளது.
ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு மறுசீரமைக்கும் வகையில் 9 ரயில் நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிகழாண்டில் மட்டும் ரயில்வே சொத்துகள் பாதுகாப்பு நடவடிக்கையில் 643 போ் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனா். மேலும், ரூ.33 கோடி மதிப்பிலான கடத்தல் பொருள்களுடன் 88 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ரயில்வே பாதுகாப்புப் படையினரால் 2, 205 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா். மேலும், களப்பணியின் போது 62 பயணிகளின் உயிா்களைக் காப்பாற்றியுள்ளனா் என்றாா் அவா்.
பழைமையான நீராவி என்ஜின்: குடியரசு தினத்தின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் உலகின் பழைமையான நீராவி என்ஜின் இஐஆா்-21 சென்னை எழும்பூா் மற்றும் கோடம்பாக்கம் இடையே இயக்கப்பட்டன. சுமாா் 167 ஆண்டுகள் பழைமையான இந்த என்ஜினை தெற்கு ரயில்வே மேலாளா் ஆா்.என் சிங் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில் குழந்தைகள், ரயில் ஆா்வலா்கள், பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...