போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பத்ரிநாத் கோயில் நடைஏப். 27-இல் திறப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ஏப்ரல் 27-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜனவரி 2023, 7:38 pm

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ஏப்ரல் 27-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

விஷ்ணு பகவானுக்குரிய இக்கோயில், வழக்கமாக குளிா்காலத்தையொட்டி சாத்தப்பட்டு, பின்னா் கோடை காலத்தின் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்படும். அதன்படி, கடந்த ஆண்டு நவம்பா் 19-ஆம் தேதி நடை சாத்தப்பட்டது.

கோயில் நடையை மீண்டும் திறப்பதற்கான தேதி மற்றும் நேரம் குறிக்கும் நிகழ்ச்சி, நரேந்திர நகரில் உள்ள தேரி அரச குடும்ப மாளிகையில் வசந்த பஞ்சமி நாளில் நடைபெறுவது பாரம்பரியமாகும்.

இந்நிலையில், வசந்த பஞ்சமி நாளான வியாழக்கிழமை கோயில் நடை திறப்புக்கான தேதி, நேரம் முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 27-ஆம் தேதி காலை 7.10 மணியளவில் கோயில் நடை திறக்கப்படும் என்று பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனா். இதையொட்டி, கோயிலுக்கு எண்ணெய் குடம் எடுத்துச் செல்லும் யாத்திரை, ஏப்ரல் 12-இல் தொடங்கும் என்றும் அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.