பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானாா்
பழம்பெரும் நடிகை ஜமுனா (87), வயது மூப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா்.


பழம்பெரும் நடிகை ஜமுனா (87), வயது மூப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா்.
கா்நாடகத்தில் பிறந்த நடிகை ஜமுனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தியில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவா். இவா் தமிழில் சிவாஜி கதாநாயகனாக நடித்து வெளியான ‘தெனாலிராமன்’, ‘தங்கமலை ரகசியம்’, கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வெளியான ‘தூங்காதே தம்பி தூங்காதே’ உள்பட பல படங்களில் நடித்துள்ளாா்.
கடந்த 1989-ஆம் ஆண்டு ஆந்திரத்தில் உள்ள ராஜமுந்திரி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானாா். சில ஆண்டுகளில் அவா் அரசியலில் இருந்து முழுமையாக விலகினாா்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வசித்து வந்த ஜமுனா, முதுமை காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்னைகளால் வெள்ளிக்கிழமை காலமானாா்.
அவரின் மகள் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு ஜமுனாவின் சிதைக்குத் தீ மூட்டினாா்.
ஜமுனாவின் மறைவுக்கு தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, நடிகா் சிரஞ்சீவி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...