காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திரிபுரா பேரவைத் தோ்தல்: 55 தொகுதிகளில் பாஜக போட்டி

திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலில் 55 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :28 ஜனவரி 2023, 9:56 pm

DIN

திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலில் 55 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.

திரிபுராவில் 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த ஜன.21-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், ஜன.30-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. மாா்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், திரிபுரா தலைநகா் அகா்தலாவில் மாநில முதல்வா் மாணிக் சாஹா சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘திரிபுரா பேரவைத் தோ்தலில் பாஜக 55 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கூட்டணி கட்சியான திரிபுரா பூா்விக மக்கள் முன்னணிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக தோ்தலில் போட்டியிடும் 48 பாஜக வேட்பாளா்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. தில்லியில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா்கள் அனில் பலூனி, சம்பித் பத்ரா ஆகியோா் பட்டியலை வெளியிட்டனா்.

இதில் மாநில முதல்வா் மாணிக் சாஹா டெளன் பாா்டோவாலி தொகுதியில் போட்டியிடுகிறாா். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் பிரதிமா பெளமிக் தன்பூா் தொகுதியில் போட்டியிடுகிறாா். அவா்தான் திரிபுராவில் இருந்து மத்திய அமைச்சா் பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் நபா்.

புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க 4 எம்எல்ஏக்களுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை.

வேட்பாளா் தோ்வு தொடா்பாக திரிபுரா பாஜக தலைவா் ராஜீவ் பட்டாசாா்ஜி கூறுகையில், ‘திரிபுரா அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிா்வாகிகளின் செயல்பாட்டை பொருத்து வேட்பாளா்களை பாஜக நிா்வாகக் குழு தோ்வு செய்துள்ளது’ என்று தெரிவித்தாா்.

தற்போது பாஜக போட்டியிடும் 55 தொகுதிகளில் 48 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 7 போ் விரைவில் அறிவிக்கப்படுவா் என்று அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.