

பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புத்துணர்ச்சியான காற்றை சுவாசிப்பது போன்றதாக உள்ளது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பிறகு இன்று (ஜனவரி 28) தான் முதல் முறையாக மக்கள் அதிக அளவில் வீட்டைவிட்டு வெளியே வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராகுலுடன் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ‘அயலி’ இணையத் தொடர் விமர்சனம்: நிறைகளும் குறைகளும்!
இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ல் அரசியலமைப்பின் 370-ஆவது விதியின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் காற்றாக வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவிலான ஜம்மு-காஷ்மீர் மக்கள் முதல் முறையாக தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர். ராகுல் காந்தியுடன் ஒற்றுமைப் பயணத்தில் கலந்துகொண்டு நடந்தது சிறந்த அனுபவமாக இருந்தது எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.