நேபாளத்தில் கிடைக்கும் ஷாலிகிராம் என்ற கற்களில் அயோத்தி கோயிலுக்கான ராமர் சிலை செதுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் சிலையுடன் சீதையின் சிலையும் அதே கல்லில் செய்து, அயோத்தி ராமர் கோயில் மூல மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது. ஷாலிகிராம் என்ற கற்கள் நதிக்கரைகளில் மட்டுமே கிடைக்கும்.
உத்தரப் பிரதேச மாநில அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்து 2024 ஜனவரி மாதம் கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கான மூலவர் சிலை நேபாள நாட்டின் ஷாலிகிராம் என்ற கற்களைக் கொண்டு செதுக்கப்படவுள்ளது. ராமர் சிலையுடன் கூடிய சீதையின் சிலைக்கும் நேபாள கற்களைக் கொண்டே செதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிலைகளை செய்யத் தேவையான ஷாலிகிராம் கற்களை ஜனவரி 30ஆம் தேதி அயோத்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் கலிகண்டகி நதியிலிருந்து கொண்டுவரப்படும் இந்த கற்கள், ஜனக்பூரிலுள்ள ஜானகி கோயிலுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன. ராமர் சிலைக்கு 23 டன் எடையும், சீதை சிலைக்கு 15 டன் எடையுடைய கற்களும் அனுப்பிவைக்கப்படவுள்ளன. கற்களை அயோத்தியில் கொண்டுசேர்க்கும் பணிகளை நேபாள அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

