ராஜஸ்தான் அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்டது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

ராஜஸ்தான் அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்டது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்  குற்றஞ்சாட்டியுள்ளார்.  

இதுகுறித்து அவர் கூறியதாவது, ராஜஸ்தான் நான்கரை ஆண்டுகளில் வளர்ச்சியடையவில்லை. ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் மோசடி செய்திகள் வருகின்றன. கெலாட் அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்டது. மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை. 

முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு, ராஜஸ்தான் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. காங்கிரஸின் வாக்குறுதிகளை நம்பி ராஜஸ்தான் மக்கள், 2018ல் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. மத்திய அரசு இரண்டு முறை எரிபொருள் விலையை குறைத்தது. 

இன்று, ராஜஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா ஐந்து பலவீனமான பொருளாதாரங்களில் ஒன்றாக கருதப்பட்டது. இன்று, இது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்றார். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com