வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சின்னத்தில் போட்டியிடுவோம்: அஜீத் பவாா்

வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஐந்தாவது முறையாக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள அஜீத் பவாா் தெரிவித்தார்.
வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சின்னத்தில் போட்டியிடுவோம்: அஜீத் பவாா்

மும்பை: வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஐந்தாவது முறையாக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள அஜீத் பவாா் தெரிவித்தார்.

மகாராஷ்டிரம் மாநில அரசியலில் திடீா் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்த அஜீத் பவாா், மாநிலத்தின் துணை முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருடன் சோ்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பெரும்பாலான எம்எல்ஏ-க்களும் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். அக்கட்சியைச் சோ்ந்த 8 எம்எல்ஏ-க்கள் மாநில அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இதுகுறித்து அஜீத் பவாா் கூறுகையில், நாட்டின் வளா்ச்சியைக் கருத்தில்கொண்டே இந்த முடிவை தேசியவாத காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. கட்சியின் அனைத்து எம்எல்ஏ-க்களும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். 

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் எந்தப் பிளவும் காணப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு எனக்கு உள்ளது. நாங்களே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி. இனி வரும் தோ்தல்களில் நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று அஜீத் பவாா் தெரிவித்தாா்.

மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்எல்ஏ-க்களில் 40 பேரும், 13 சட்ட மேலவை உறுப்பினர்களில் 6 பேர் பாஜக-சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐந்தாவது முறையாக துணை முதல்வரானார் அஜித் பவார்.

2011-2014 இல் காங்கிரஸ் கூட்டணி அரசில் 2 முறை துணை முதல்வராக இருந்துள்ளார். 

2019 இல் திடீரென பாஜகவுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வரானார். ஆனால் பெரும்பான்மை இல்லாததால் 3 நாள்கள் மட்டுமே பதவி இருந்தது. 

2019 - 2022 வரை சிவசேனா, காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே அரசில் துணை முதல்வராக இருந்தார். 

தற்போது மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com