தில்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்குரைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தில்லி பார் கவுன்சில் தலைவர் கே.கே. மனன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மனன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயுதங்களுக்கு உரிமம் உள்ளதா, இல்லையா என்று விசாரிக்கப்படும் என்றும், ஆயுதங்களுக்கு உரிமம் இருந்தாலும் வழக்குரைஞரோ அல்லது வேறு யாரோ, நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயுதங்களை பயன்படுத்த அனுமதியில்லை மனன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


