தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கர்நாடகத்தில் இயல்பைவிட 38 சதவீதம் மழை குறைவு!

கர்நாடகத்தில் இந்தாண்டு இயல்பை விட 38 சதவீதம் மழை குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2023, 11:19 am

DIN

கர்நாடகத்தில் இந்தாண்டு இயல்பை விட 38 சதவீதம் மழை குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஜூன் 1 முதல் இன்று வரை 23 செ.மீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், இந்தாண்டு குறைவான மழைப் பதிவாகியுள்ளது. இதேபோன்று, கேரளத்திலும் இயல்பான அளவான 79 செ.மீ பதிலாக 44 செ.மீ மழையே பதிவாகியுள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தில் ஜூன் மாதத்தில் சற்று மந்தமாகக் காணப்பட்ட பருவமழை ஜூலை மாதத்தில் தீவிரமடைந்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தக்ஷிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. எனவே, இந்த மாவட்டங்களில் ஜூலை 5 முதல் ஜூலை 7 வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பெலகாவி, தார்வாட், ஹாவேரி, ஹாசன் மற்றும் மைசூரு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏரிகள் நிரம்பியுள்ளன. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.