4 மாநில பேரவைத் தேர்தல்: பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்
ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.


ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களுக்கும் 2024 ஆம் ஆண்டு மக்களவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு பாஜக தற்போதே ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள 4 மாநிலங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ராஜஸ்தானுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், இணைப் பொறுப்பாளர்களாக குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் பாஜக தலைவர் குல்தீப் பிஷ்னோய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சத்தீஸ்கர் தேர்தல் பொறுப்பாளராக ஓம் பிரகாஷ் மாத்தூரும், இணை பொறுப்பாளராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மத்தியப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் மற்றும் இணைப் பொறுப்பாளராக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெலங்கானா தேர்தல் பொறுப்பாளராக பாஜக எம்பி பிரகாஷ் ஜாவடேகரும், இணைப் பொறுப்பாளராக சுனில் பன்சாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...