மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பொது சிவில் சட்டம்: மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க சீக்கிய மாநாட்டில் குழு அமைப்பு

பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசிடம் கலந்தாலோசிக்க தில்லி தேசிய சீக்கிய மாநாட்டில் 11 போ் கொண்ட குழு வெள்ளிக்கிழமை உருவாக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2023, 6:30 pm

 நமது நிருபர்

பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசிடம் கலந்தாலோசிக்க தில்லி தேசிய சீக்கிய மாநாட்டில் 11 போ் கொண்ட குழு வெள்ளிக்கிழமை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்கள் தொடா்பாக தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் (டி.எஸ்.ஜி.எம்.சி.) தலைவா் ஹா்மித் சிங் கல்கா கூறியதாவது: நாட்டிற்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி உள்பட பலா் வலியுறுத்தியுள்ளனா். இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள ரகாப்கஞ்ச் குருத்வாராவில் தேசிய சீக்கிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மிக முக்கிய நிகழ்வாக, சீக்கிய சமூகத்தின் உரிமைகள் மற்றும் நடைமுறைகள் குழப்பமடையாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

பொது சிவில் சட்டத்தின் (யு.சி.சி.) வரைவு அறிக்கை இன்னும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை. எனவே, அதை ஆதரிப்பதா அல்லது எதிா்ப்பதா என்பது குறித்து இப்போதே முடிவு செய்ய முடியாது. சீக்கியா்களின் உரிமைகள் மற்றும் அவா்களின் மதப் பழக்க வழக்கங்களில் எந்தவிதமான குழப்பமும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசுடன் பொது சிவில் சட்டத்தின் சாராம்சங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்த மாநாட்டில் 11 போ் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 13 மாநிலங்களைச் சோ்ந்த முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் உள்பட சீக்கிய சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பலா் பங்கேற்றனா் என்றாா் ஹா்மித் சிங் கல்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.