24 மணி நேரமாக கிணற்றில் சிக்கித் தவிக்கும் முதியவர்: தொடரும் மீட்புப் பணிகள்!

கேரளத்தில் கிணற்றில் மணலுக்கு அடியில் புதைந்த 55 வயது முதியவரை மீட்கும் பணிகள் 24 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கேரளத்தில் கிணற்றில் மணலுக்கு அடியில் புதைந்த 55 வயது முதியவரை மீட்கும் பணிகள் 24 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.

கிணற்றில் மணலுக்கு அடியில் புதைந்து 24 மணி நேரம் ஆவதால் அந்த முதியவரின் நிலை என்ன என்பது குறித்தும் கவலை எழுந்துள்ளது.

இது தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தரப்பில் கூறியதாவது: இரவு முழுவதும் கிணற்றில் சிக்கிய மகாராஜன் என்ற முதியவரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஜன் விழிஞ்சம் மாவட்டத்தில் முக்கோலா என்ற பகுதியில் சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். கிணற்றில் வளையங்களை பொறுத்துவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து விழுந்ததில் அவர் கிணற்றில் மண்ணுக்கடியில் சிக்கிக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பான தகவல் எங்களுக்கு நேற்று (ஜூலை 8) காலை 9.30 மணிக்கு தெரிய வந்தது. 100 அடி ஆழமுள்ள அந்த கிணற்றிலிருந்து மண்ணை அகற்றி முதியவரை மீட்கும் பணியில் உள்ளூர் பொதுமக்களும், மீட்புப் படையினரும் கடந்த 24 மணி நேரமாக ஈடுபட்டுள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com