தில்லி வெள்ளத்துக்கு பாஜகவே காரணம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

தில்லியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா அரசுமே காரணம் என ஆம் ஆத்மி சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தில்லி வெள்ளத்துக்கு பாஜகவே காரணம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

தில்லியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா அரசுமே காரணம் என ஆம் ஆத்மி சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா அரசும் தெரிந்தே தலைநகர் தில்லியை நோக்கி நீரை திறந்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் கூறியதாவது: கடந்த 3-4 நாள்களாக தில்லியில் மழை இல்லை. இருந்தும், யமுனையில் தண்ணீர் அளவு 208.66 மீட்டரை எட்டியுள்ளது. ஹத்னிகுந்த் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் வழக்கமாக மேற்கு கால்வாய், கிழக்கு கால்வாய் மற்றும் யமுனை வழியாக திறந்து விடப்படும். ஆனால், வேண்டுமென்றே ஜூலை 9 மற்றும் ஜூலை 13 நாள்களுக்கிடையே தண்ணீரானது யமுனை வழியாக மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. அதுவும் தில்லியை நோக்கி மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. மேற்கு கால்வாய் மற்றும் கிழக்கு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் இதே குற்றச்சாட்டை நேற்று (ஜூலை 14) முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் தரப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com