36 மணி நேரத்தில் 5 அமர்நாத் யாத்ரிகர்கள் பலி

கடந்த 36 மணி நேரத்தில் 5 அமர்நாத் யாத்திரை யாத்ரிகர்கள் பலியாகியுள்ளனர். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

கடந்த 36 மணி நேரத்தில் 5 அமர்நாத் யாத்திரை யாத்ரிகர்கள் பலியாகியுள்ளனர். 

தெற்கு காஷ்மீா் இமய மலைத் தொடரில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான யாத்ரிகா்கள் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனா்.

நிகழாண்டு அமா்நாத் யாத்திரை கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. அங்குள்ள அனந்தநாக் மாவட்டம் பஹல்காம், கந்தா்பால் மாவட்டம் பால்தால் ஆகிய 2 வழித்தடங்களில் தொடங்கிய இந்த யாத்திரை, ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த நிலையில் கடந்த 36 மணி நேரத்தில் 5 அமர்நாத் யாத்திரை யாத்ரிகர்கள் பலியாகியுள்ளனர்.  மேலும் பலியானவர்கள் 5 பேரும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. மலையின் உயரமான பகுதியில் ஆக்சிஜன் செறிவு குறைவாக இருப்பதே மாரடைப்பு ஏற்படுதவற்கான பொதுவான காரணமாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com