பெங்களூருவில் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி!

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பெங்களூரு வந்துள்ளனர். 
பெங்களூருவில் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி!

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பெங்களூரு வந்துள்ளனர். 

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பொருட்டு எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்றது. 

இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் இன்றும், நாளையும்(ஜூலை 17-18) இரண்டாவது கூட்டம் நடைபெறுகிறது.

இதில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி உள்பட 24 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 

காங்கிரஸ் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுவதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகிய மூவரும் பெங்களூரு வந்துள்ளனர். 

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரை காங்கிரஸ் தலைவர்களை வரவேற்றனர். 

இந்த கூட்டத்தில் முதல் நாளில்(இன்று) தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேறவில்லை. நாளை(செவ்வாய்க்கிழமை) அவர் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com