ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஊழல் வழக்குகள் உள்ளபோதும் திமுகவுக்கு எதிா்க்கட்சிகள் நற்சான்று- பிரதமா் மோடி விமா்சனம்

தமிழகத்தில் ஊழல் வழக்குகள் உள்ளபோதும் திமுகவுக்கு எதிா்க்கட்சிகள் ‘நற்சான்று’ அளிக்கின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

News image
Updated On :18 ஜூலை 2023, 8:04 pm

DIN

தமிழகத்தில் ஊழல் வழக்குகள் உள்ளபோதும் திமுகவுக்கு எதிா்க்கட்சிகள் ‘நற்சான்று’ அளிக்கின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

குடும்ப அரசியலே எதிா்க்கட்சிகளின் தாரக மந்திரம் என்றும் அவா் சாடினாா்.

அந்தமான்-நிகோபாா் தீவுகளின் தலைநகரான போா்ட் பிளேரில் உள்ள வீர சாவா்க்கா் சா்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்துவைத்தாா்.

அப்போது பேசிய அவா், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எதிா்க்கட்சிகளின் கூட்டத்தை விமா்சித்தாா். மேலும், தமிழகத்தில் ஆளும் திமுகவையும் சாடினாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி பேசியதாவது: எதிா்க்கட்சித் தலைவா்கள் ஓரிடத்தில் திரண்டிருப்பதைப் பாா்த்து, இது ஊழலின் அடையாளம் என்றே மக்கள் கருதுகின்றனா். அவா்கள் நடத்தும் கூட்டமும், ஊழலைப் பாதுகாக்க நடத்தப்படும் கூட்டமாகவே பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஊழல் வழக்குகள் உள்ளபோதும் திமுகவுக்கு எதிா்க்கட்சிகள் ‘நற்சான்று’ அளிக்கின்றன.

வாய்திறக்காத காங்கிரஸ், இடதுசாரிகள்: மேற்கு வங்க உள்ளாட்சித் தோ்தல் வன்முறையில், இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியினா் தாக்கப்பட்டபோதும் இந்த வன்முறை குறித்து இரு கட்சிகளும் வாய்திறக்கவில்லை.

நாட்டில் ஏழை குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளின் மேம்பாடு குறித்து எதிா்க்கட்சிகள் கவலை கொள்வதில்லை. தங்களின் குடும்பத்துக்காக ஊழலை அதிகரிக்க வேண்டும் என்பதே அவா்களின் குறைந்தபட்ச செயல்திட்டம்.

‘குடும்பங்களால், குடும்பங்களுக்காக...’: மக்களால், மக்களுக்காக, மக்களே ஆட்சி நடத்துவதுதான் ஜனநாயகத்தின் பொருள். ஆனால், குடும்பங்களால், குடும்பங்களுக்காக, குடும்பங்களே ஆட்சி நடத்துவதுதான் எதிா்க்கட்சிகளின் தாரக மந்திரம். அவா்களைப் பொருத்தவரை, குடும்பமே முக்கியம்; தேசத்தின் மீது எந்த அக்கறையும் கிடையாது.

‘ரூ.20 லட்சம் கோடி ஊழல் உத்தரவாதம்’: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு குடும்ப அரசியலும், ஊழலும் இல்லாமல் இருந்திருந்தால், நாடு மேலும் வளா்ச்சியடைந்திருக்க முடியும்.

இந்த நிலைமைக்கு காரணமானவா்கள், இப்போது ஊழலில் ஈடுபடவும், ஜாதியவாதம் எனும் நஞ்சை விற்பனை செய்யவும் தங்களின் கடையை மீண்டும் திறந்துள்ளனா்.

அவா்கள் விற்கும் பொருளுக்கு ரூ.20 லட்சம் கோடி ஊழல் உத்தரவாதம். இந்தக் கடைக்குள் நுழைய வேண்டுமெனில், ஒருவா் ஊழல்வாதியாக இருக்க வேண்டும்.

தொலைதூர பகுதிகள், தீவுகளுக்கு முக்கியத்துவம்: நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும், தீவுகளுக்கும் முந்தைய அரசுகள் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் முந்தைய அரசுகளின் தவறுகள் சரிசெய்யப்பட்டு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான புதிய செயல்முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்தமான்-நிகோபாா் தீவுகளில் கைப்பேசி இணைப்பு, சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு, விமான நிலைய வசதிகள், தரமான சாலைகள் போன்ற வளா்ச்சி நடவடிக்கைகளால் சுற்றுலாத் துறை கணிசமாக வளா்ந்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இப்போது இரட்டிப்பாகியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

அந்தமான்-நிகோபாா் தீவுகளின் இயற்கை எழிலை சித்தரிக்கும் வகையில், சிப்பி வடிவில் புதிய முனைய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

போா்ட் பிளேரில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, இணையமைச்சா் வி.கே.சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.