டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணிப்பூர் வன்கொடுமை குறித்து பிரிஜ் பூஷண் கருத்து!

மணிப்பூர் வன்கொடுமை குறித்து இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாருக்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷண் கருத்து தெரிவித்துள்ளார். 

News image
பிரிஜ் பூஷண் சரண் சிங் (கோப்புப் படம்)
Updated On :2 பிப்ரவரி 2024, 2:41 am

DIN

மணிப்பூர் வன்கொடுமை குறித்து இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாருக்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

மணிப்பூரில் இரு பெண்களுக்கு நடந்த கொடுமை கண்டிக்கத்தக்கது என்றும், சுதந்திர இந்தியாவில் நடந்த வருந்தத்தக்க சம்பவம் எனவும் பிரிஜ் பூஷண் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது,  மணிப்பூரில் நிலவரம் மிகவும் மோசமாகவுள்ளது. உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் அங்கு சென்றிருந்தார். மணிப்பூரில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. சுதந்திர இந்தியாவில் நடந்த வருந்தத்தக்க சம்பவம். இந்த சம்பவம் குறித்து பிரதமரும் கருத்து தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார். 

மணிப்பூரில் கடந்த மே 4-ஆம் தேதி, குகி பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 2 பெண்கள், மைத்தேயி தரப்பைச் சோ்ந்த ஆண்களால் ஆடைகள் களையப்பட்டு, ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.