மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூரில் குற்றவாளிகளின் வீடுகளை தீ வைத்து எரித்த பெண்கள்!

மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீட்டிற்கு பெண்கள் தீ வைத்தனர். 

News image
Updated On :22 ஜூலை 2023, 12:08 pm

DIN

மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீட்டிற்கு பெண்கள் தீ வைத்தனர். 

மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டு சென்ற விடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி ஹுய்ரேம் ஹிரோதாஸ் சிங் (32) உள்பட இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த சில பெண்களே குற்றவாளியான அதே சமூகத்தைச் சேர்ந்த ஹுய்ரேம் ஹிரோதாஸ் சிங் வீட்டிற்கு நேற்று தீ வைத்தனர். 

இதன் தொடர்ச்சியாக மற்றொரு குற்றவாளியின் வீடும் தீ வைத்து அழிக்கப்பட்டது. 

தௌபல் மாவட்டத்தில் உள்ள பேச்சி அவாங் லைக்காய் என்ற இடத்தில் உள்ள 32 வயது இளைஞரின் வீட்டை பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு வீட்டை இடித்து சேதப்படுத்தி பின்னர் எரித்தனர். 

மேலும் ஒரு சில பகுதிகளில் பெண்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.