விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அமர்நாத்தில் 3.30 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

அமர்நாத்தில் 24 நாளில் 3.30 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கோயில் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :25 ஜூலை 2023, 5:25 am

DIN

அமர்நாத்தில் 24 நாளில் 3.30 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கோயில் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் புனித யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது. 

இதனிடையே, 3,000 பேர் அடங்கிய பயணிகள் குழு இன்று காலை பகவதி நகரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. அதில் 1,865 பேர் பஹல்காம் பாதையிலும், 1,160 பேர் பால்டால் வழியாகவும் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர். 

அமர்நாத் யாத்திரை தொடங்கி இதுவரை 36 பேர் இறந்துள்ளனர். 62 நாள்கள் நடைபெறும் யாத்திரை ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.