மணிப்பூர் விவகாரம்: கருப்பு உடை அணிய எதிர்க்கட்சியினர் முடிவு!

மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி வரும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை கருப்பு உடை அணிய திட்டமிட்டுள்ளனர்.
மணிப்பூர் விவகாரம்: கருப்பு உடை அணிய எதிர்க்கட்சியினர் முடிவு!

தில்லி: மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி வரும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை கருப்பு உடை அணிய திட்டமிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. எனினும், 5 நாள்களாக மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், நாடாளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டு இரு அவைகளும் முடங்கியுள்ளன.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் நாளை கருப்பு நிற உடை அணிந்து வர திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் நாள் குறித்து அவைத் தலைவர் ஓம் பிர்லா ஓரிரு நாள்களில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவாதத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும்போது மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சியினர் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com