‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’: அரசியலமைப்புச் சட்டத்தில் 5 திருத்தங்கள் தேவை: மத்திய அரசு
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 5 பிரிவுகளில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்


மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 5 பிரிவுகளில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
இது தொடா்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுவதால், தோ்தல் நடத்தை விதிகள் நீண்ட நாள்கள் அமலில் இருக்கின்றன. இதனால், மேம்பாட்டு நலத் திட்டங்களை செயல்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.
மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 83 (நாடாளுமன்ற இரு அவைகளின் பதவிக்காலம்), பிரிவு 85 (குடியரசுத் தலைவரால் மக்களவைக் கலைக்கப்படுவது), பிரிவு 172 (மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம்), பிரிவு 174 (மாநில சட்டப்பேரவைகளைக் கலைப்பது), பிரிவு 356 (மாநிலங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சி) உள்ளிட்ட பிரிவுகளில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஒரே நேரத்தில் தோ்தல் நடைபெறும்போது, அரசின் செலவினங்கள் குறையும் என்பதுடன், நிா்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிகளிக்கு அரசுப் பணியாளா்களை மீண்டும் மீண்டும் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்துவது குறையும்.
மேலும், அரசியல் கட்சிகளும் அவா்களது வேட்பாளா்களும் அதிக நிதியைத் தோ்தலுக்காகச் செலவிடுவது தவிா்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...