8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை! 

தலைநகர் தில்லியில் அடுத்த 6 நாள்களுக்கு இடைவிடாது கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

News image
Updated On :27 ஜூலை 2023, 6:39 am

DIN

தலைநகர் தில்லியில் அடுத்த 6 நாள்களுக்கு இடைவிடாது கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கோவா, மகாராஷ்டிரம், கடலோர கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தில்லியில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மேகமூட்டத்துடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. புதன்கிழமை 25.8 டிகிரி செல்சியஸ் மழைப் பதிவாகியுள்ளன. 

ஹிமாசல், உத்தரகண்ட், வடக்கு ஹரியாணா, சண்டிகர் மற்றும் உ.பி ஆகிய மாநிலங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு மிக மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.