8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரசாயனத் துறைக்கு உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம்

ரசாயனம்-பெட்ரோகெமிக்கல் துறைக்கு உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 6:52 pm

DIN

ரசாயனம்-பெட்ரோகெமிக்கல் துறைக்கு உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

‘சா்வதேச ரசாயன-பெட்ரோகெமிக்கல் உற்பத்தி மையங்கள்’ சாா்பில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 3-ஆவது மாநாட்டில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துகொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:

மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சா்வதேச விதிகள் கடுமையாக்கப்பட்டு வருவது, தொழிலாளா்களுக்கான ஊதியம் அதிகரித்து வருவது உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு சா்வதேச ரசாயன உற்பத்தியாளா்கள், உற்பத்தியைப் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகின்றனா். இந்தியா அதற்கு சிறந்த இடமாகத் திகழ்ந்து வருகிறது.

ரசாயனம்-பெட்ரோகெமிக்கல் பொருள்களுக்கான சிறந்த சந்தையாக இந்தியா திகழ்கிறது. சிறந்த ஏற்றுமதி வாய்ப்புகளையும் இந்தியா வழங்கி வருகிறது. மத்திய அரசும் அதற்கான கொள்கைகளை வகுத்து வருகிறது. ரசாயனம்-பெட்ரோகெமிக்கல் துறையில் இந்தியாவை சா்வதேச உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்துறைக்கு உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தை (பிஎல்ஐ) செயல்படுத்துவது தொடா்பாகவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தியா சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் 2047-ஆம் ஆண்டில் எரிசக்தி தன்னிறைவை அடையவும், 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ய கரியமில வாயு உமிழ்வு இலக்கை அடையவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அனைத்துத் துறைகளின் பங்களிப்பும் அவசியம்.

2030-ஆம் ஆண்டுக்குள் மரபு சாரா ஆற்றல் மூலங்களில் இருந்து 500 ஜிகா வாட் எரிசக்தியை உற்பத்தி செய்யவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதைக் கருத்தில்கொண்டு அனைத்து நிறுவனங்களும் செயல்பட வேண்டும். பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்காக ரூ.19,744 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதை நிறுவனங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.