உ.பி.யில் மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் பலி
உ.பி.யில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மூன்று இளைஞர்கள் பலியானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.


உ.பி.யில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மூன்று இளைஞர்கள் பலியானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், கௌர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌர்-வால்டர்கஞ்ச் சாலையில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனம் ஒன்றில் 3 இளைஞர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது வளைவு ஒன்றில் திரும்பியபோது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி நெற்பயிர் வயலுக்குள் விழுந்தது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பலியானதாக போலீசார் தெரிவித்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்வாக வழக்குப்பதிவு செய்தும் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...