இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கைப்பேசி செயலியிலும் மாறியது டிவிட்டர் லோகோ: குருவி பறந்தே விட்டது

டிவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ மாற்றப்பட்ட நிலையில், தற்போது ஆண்டிராய்டு செயலிகளிலும் புதிய லோகோ அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜூலை 2023, 9:51 am

டிவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ இந்த வாரத் தொடக்கத்தில் மாற்றப்பட்ட நிலையில், தற்போது ஆண்டிராய்டு செயலிகளிலும் புதிய லோகோ அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

செல்லிடப்பேசி செயலிகளில் நேற்று வரை இருந்த நீலக் குருவி ஒரேயடியாக மறைந்து, எக்ஸ் லோகோ-வாக மாறிவிட்டது.  கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் டிவிட்டர் செயலியின் லோகோவும் எக்ஸ் ஆக மாறிவிட்டிருப்பதன் ஸ்கிரீன்ஷாட்ஸ்கள் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு இருந்த நீலக் குருவி, தற்போது கருப்பு பின்னணியில், எக்ஸ் என்ற ஆங்கில வார்த்தை கொண்ட லோகோவாக மாறிவிட்டது. 

முன்னணி சமூக ஊடகமான ட்விட்டருக்கு ‘எக்ஸ்’ என்று புதிய பெயரிடப்பட்டது. அதன் புகழ்பெற்ற நீல இலச்சினையும் (லோகோ) ‘எக்ஸ்’ என்ற எழுத்து வடிவில் மாற்றப்பட்டது.

நவீன காா்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா, தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டரை கடந்த ஆண்டு கையப்படுத்தினாா்.

ஏற்கெனவே, ‘எஸ்க்’ என்ற மாபெரும் சமூக ஊடகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறி வந்த அவா், ட்விட்டரின் பெயரையும், இலச்சினையையும் மாற்றுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள ட்விட்டா் அலுவகத்தில் ‘எக்ஸ்’ இலச்சினை பொறிக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட்டார்.

தனது ட்விட்டா் கணக்கிலுள்ள தன்னைப் பற்றிய அறிமுகப் பகுதியில், பழைய இலச்சினைக்குப் பதில் புதிய இலச்சினையை பதிவு செய்த மஸ்க், ஊடகத்தின் பெயரையும் ‘எக்ஸ்.காம்’ என்று மாற்றினார்.

ட்விட்டா் பதிவுகள் அனைத்தும் ‘ட்வீட்கள்’ என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்தன. அவை இனி ‘எக்ஸ்’கள் என்று அழைக்கப்படும் என்று மஸ்க் கூறியிருந்தார்.

நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்த ட்விட்டா் இலச்சினையும், பெயரும் மாற்றப்படுவது குறித்து ஏராளமான சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் தங்களது அதிருப்தியையும், வேதனையையும் வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், தற்போது கைப்பேசி செயலியிலும் டிவிட்டர் லோகோ மாறிவிட்டிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.