ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கேரளத்தில் நூலிழையில் தப்பிய பெட்ரோல் டேங்கர் ரயில்: 4 பேரிடம் விசாரணை

கேரள மாநிலம் கன்னூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆலப்புழா - கன்னூர் விரைவு ரயிலின் தீப்பெட்டிகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

Published On :


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கன்னூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆலப்புழா - கன்னூர் விரைவு ரயிலின் பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகளுக்கு அருகே இருந்த பெட்ரோல் டேங்கர் லாரி அதிர்ஷ்டவசமாக தப்பியது. இதற்கு ஏதேனும் சதிச்செயல் காரணமா என்ற கோணத்தில் 4 பேரை கைது செய்திருக்கும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகளை, தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் மூன்று ரயில் பெட்டிகள் முழுமையாக தீயில் எரிந்து நாசமானது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

இது விபத்தா அல்லது ரயில் பெட்டிக்கு தீ வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த ஏப்ரல் மாதம், இதே ரயிலில்தான் 3 பேர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்ததால், அது தொடர்பான சதியா என்ற கோணத்திலும் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகளுக்கு அருகே சுமார் 100 மீட்டர் இடைவெளியில்தான், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் ரயிலும் நின்று கொண்டிருந்தது. இந்த ரயில் பெட்டிகளுக்கு தீ பரவினால் கடும் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால், நூலிழையில், இந்த டேங்கர் லாரிக்கு தீப்பிடிக்கும் முன் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் காவல்துறையினரிடம் விசாரணை அறிக்கைக் கோரியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.