தில்லியில் 8 ஆண்டுகளில் முதன் முறையாக காற்றின் தரம் 74 நாள்கள் சிறப்பாக பதிவு: மத்திய அரசு தகவல்
சுமாா் 74 நாள்கள் ‘திருப்தி’, ‘ மிதமான’ காற்றின் தர நாள்களாக இருந்தன என்றும் மத்திய சுற்றுச் சூழல் பருவநிலை மாற்றம் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கடந்த 8 ஆண்டுகளில் (2016 - 2023) ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டங்களில் நிகழாண்டில் தில்லியில் அதிகஅளவில் காற்றின் தரம் சிறப்பு பிரிவில்பதிவு செய்துள்ளது என்றும், சுமாா் 74 நாள்கள் ‘திருப்தி’, ‘ மிதமான’ காற்றின் தர நாள்களாக இருந்தன என்றும் மத்திய சுற்றுச் சூழல் பருவநிலை மாற்றம் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த எட்டு ஆண்டுகளில் இடைப்பட்ட ஆண்டான 2020-ஆம் ஆண்டு கொவைட் -19 காரணமாக குறைவான மக்கள் நடமாட்டம், தொழில்துறை, வணிக நடவடிக்கைகள் முடக்கப்பட்டதன் காரணமாக ஜனவரி முதல் மே வரை 98 நாள்கள் காற்றின் தரம் திருப்தியான மற்றும் மிதமாக இருந்தது. இதை ஒப்பிடாமல் குறிப்பிட்டால் 7 ஆண்டுகளில் நிகழாண்டில் சராசரியாக குறைந்த காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரவுகள் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் காற்றின் தரக் குறியீடு 2016-ஆம் ஆண்டில் சராசரியாக 283.77 என்கிற அளவில் பதிவாகியிருந்தது. இது இதே காலக்கட்டத்தில் 2023-இல் 213.49-ஆக பதிவாகியுள்ளது. (கொவைட் 19 ஆண்டில் காற்றுத் தரக்குறியீடு சராசரி 181.42).
2016 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தின் மற்ற காற்றின் தர விவரங்கள் வருமாறு: 2016-இல் பி.எம் 10 மற்றும் பி.எம் 2.5 மாசு நுண்துகள்கள் செறிவில் முறையே 307, 146 என்கிற அளவில் சராசரியாக இருந்தது. இது நிகழாண்டில் பி.எம் 10 மற்றும் பி.எம் 2.5 மாசு நுண்துகள்கள் செறிவில் முறையே 215, 101 என்கிற அளவில் சராசரி அளவைக் கண்டுள்ளது. (கொவைட் 19 ஆண்டில் சராசரியாக பிஎம் 10, பிஎம் 2.5 முறையே 165, 86).
மேலும், 2016-இல் சராசரியாக 15 நாள்கள் மட்டுமே ‘திருப்தி’ , ‘மிதமான’ காற்றின் தர நாள்களை தில்லி கண்டது. கடந்த 7 ஆண்டுகளுடன் (2020- ஆம் ஆண்டு கொவைட் முடக்கத்தை தவிர ) ஒப்பிடும் போது நிகழ் 2023-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 74 நாள்கள் ‘திருப்தி’, ‘மிதமான’காற்றின் தர நாள்களை தில்லி கண்டுள்ளது.
மற்ற ஆண்டுகளில் அதிகபட்ச ‘திருப்தி’, ‘மிதமான’ நாள்களாக 2017 -இல் 36; 2018 -இல் 44; 2019 -இல் 59; 2020 - 98; 2021 -இல் 59 மற்றும் 2022-இல் 37 என பதிவாகியுள்ளது.
இறுதியாக நிகழாண்டில் தில்லியில் ‘மோசம்’ , ’கடுமையான’ காற்றின் தர நாள்கள் 77-ஆக குறைந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் ( ஜனவரி முதல் மே வரை) 2016-இல் ‘மோசம்’, ‘கடுமையான’ காற்றின் தர நாள்கள் 133-ஆக இருந்தது. அதாவது 2016-ஆம் ஆண்டைவிட நிகழாண்டில் 42.10 சதவீதம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Caption
செய்தி உண்டு...
தில்லியில் ஆண்டு வாரியாக ஜனவரி முதல் மே வரையிலான சராசரி காற்றின் தரக் குறியீடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...