ரயில் விபத்து: முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து

ஒடிசா ரயில் விபத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
ரயில் விபத்து: முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து
Published on
Updated on
1 min read


ஒடிசா ரயில் விபத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

செம்மொழிப் பூங்காவில் மலர்க் கண்காட்சியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடம், கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசா ரயில் விபத்து குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசவுள்ளார். 

ஹெளராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின் பாலசோா் மாவட்டத்தில் தடம்புரண்டிருந்த பெங்களூரு-ஹெளரால் மீதும், நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடனும் மோதி விபத்துக்குள்ளானது.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்களின் விபத்து நேர்ந்தது.

விபத்துக்குள்ளான 2 பயணிகள் ரயில்களும் தமிழகத்தின் ரயில் நிலையங்கள் வழியாகச் செல்வதால், அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பயணித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

தமிழகத்திலிருந்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இன்று காலை 9 மணியளவில் ஒடிசா விரைகின்றனர். அவர்களுடன் ஐஏஎஸ் குழுவும் விரைகிறது.

உதவி எண்கள்:

சென்னை சென்ட்ரலுக்கு தொடர்புகொள்ள: 044-25330952, 044-25330953, 044-25354771.

மக்களுக்கு உதவுவதற்காக டிஜிபி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதற்கான தொடர்பு எண்கள்: 1070, 044-28593990, 9445869848.

அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர் (ஒடிசா): 91 6782262286 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com