காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒடிசா ரயில் விபத்து: மீட்புப் பணிகள் தீவிரம் - ஒடிசா தலைமைச் செயலாளர்

ஒடிசா கோர ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளாதாக ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :3 ஜூன் 2023, 5:06 am

DIN



ஒடிசா கோர ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளாதாக ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா கோர ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில், ரயில் விபத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாவட்ட நீர்வாகமும் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

ரயில் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் உடனுக்குடன் உடல் கூறாய்வு செய்யப்பட்டு வருகின்றன. 

உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பவுதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். 

ரயில் விபத்து மீட்புப் பணியில் 7 தேசிய மீட்புப் படையினர், 5 ஒடிசா மாநில மீட்புப் படையினர், 24 தீயணைப்பு படை வீரர்கள் குழு, உள்ளூர் போலீசார், தன்னார்வலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.