பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் வீட்டில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், மக்களவை பாஜக உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடா் விசாரணையில் உள்ளதாகவும், இது தொடா்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தில்லி காவல்துறை கடந்த புதன்கிழமை(மே 31) தெரிவித்தது.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கைய கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரா்கள் தொடா் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா சமயத்தில் அவா்கள் பேரணி நடத்த முற்பட்டு கைது செய்யப்பட்டதும், அதைத் தொடா்ந்து அவா்கள் பெற்ற ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசச் சென்ற செய்தி நாடு முழுவதும் பேசுபொருளாகியது.
இந்நிலையில், பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் வீட்டில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் குற்றசாட்டு தொடர்பாக வீட்டில் இருந்த ஊழியர்கள் 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உ.பி.யின் கோண்டாவில் உள்ள பிரிஜ் பூஷண் வீட்டில் இருந்த ஊழியர்களிடம் வாக்குமூலம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிஷ் பூஷண் மீதான பாலியல் புகாரில் இதுவரை சிறப்பு புலனாய்வு குழு மொத்தம் 137 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: டெல்டா மாவட்டங்களில் ஜூன் 9-ல் முதல்வர் ஆய்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு!

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்

மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ரயில் சேவை தொடக்கம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



