சென்னையிலிருந்து சர்வதேச விமானங்களை இயக்கும் இண்டிகோ!
சென்னை விமான நிலையத்தில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தில், இண்டிகோ விமான நிறுவனம் தனது சேவையை தொடங்கியுள்ளது.


சென்னை: சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தில், இண்டிகோ விமான நிறுவனம் தனது சேவையை தொடங்கியுள்ளது.
பயணிகள் கையாளும் திறனை அதிகரிக்க ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் இண்டிகோ நிறுவனமானது ஜூன் 13ஆம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் டி2-ல் இருந்து தனது சர்வதேச நடவடிக்கைகளைத் தொடங்கியது.
சென்னை விமான நிலையம் இன்று முதல் அனைத்து சர்வதேச விமானங்களை தனது புதிய முனையக் கட்டடத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் என்று அறிவித்தது.
தொழில்துறை நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச முனையத்தில் இண்டிகோவின் செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற விமான நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் மாநிலத்தின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 2.30 கோடி பயணிகள் பயணம்செய்து வரும் நிலையில், புதிய முனையம் திறப்பால் பயணிகள் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய முனையம் தமிழ் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும் வேளையில் கோலம், கோயில்கள் மற்றும் இயற்கை சூழலை முன்னிலைப்படுத்தும் பாரம்பரிய அம்சங்களை உள்ளடக்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...