
பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தில் 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரபிக் கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் நாளை (ஜூன் 15) பிற்பகல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது குஜராத் மாநிலத்தின் கட்ச், தேவபூமி துவாரகா, போா்பந்தா், ஜாம்நகா், ராஜ்கோட், ஜுனாகா், மோா்பி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு, காற்றின் வேகம் மணிக்கு 135 முதல் 145 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. குஜராத் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் எச்சரிக்கையினால் குஜராத்தில் 67 ரயில்கள் முழுவதுமாகவும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் பகுதியாகவும் என மொத்தம் 95 ரயில்கள் நாளை(ஜூன் 15) வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
பந்த்ரா - புஜ் கட்ச் எக்ஸ்பிரஸ், தாதர் - புஜ் எக்ஸ்பிரஸ், ஓகா - ராஜ்கோட் முன்பதிவில்லா ரயில், ஓகா - வெராவல் எக்ஸ்பிரஸ், ஓகா - பவ்நகர் எக்ஸ்பிரஸ், வெராவல்- ராஜ்கோட் எக்ஸ்பிரஸ், வெராவல் - ஆமதாபாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | பிபர்ஜாய் புயல்: சௌராஷ்டிரா, கட்ச் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.