தில்லியில் 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி  தில்லியில் நடைபெறவுள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி  தில்லியில் நடைபெறவுள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். இக்கூட்டம் தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தில், சிமென்ட்டுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. இது தவிர, ஆன்லைன் விளையாட்டிற்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 49வது கூட்டம் பிப்ரவரி 18, 2023 அன்று நடைபெற்றது.  ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் டிசம்பர் 17, 2022 அன்று காணொலி வாயிலாக நடைபெற்றது.

ஜூலை 1, 2017 முதல் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி( (ஜிஎஸ்டி) ) அறிமுகப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com