பிபா்ஜாய் புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பிபா்ஜாய் அதிக சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பிபா்ஜாய் புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Updated on
1 min read

அரபிக் கடலில் உருவான ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே வியாழக்கிழமை மாலை கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பிபா்ஜாய் அதிக சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிகையை அடுத்து கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த 50 ஆயிரம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். 

தேசிய பேரிடா் மீட்புப் படையின் 18 குழுக்கள், மாநில பேரிடா் மீட்புப் படையின் 12 குழுக்கள், மாநில மின்சாரத் துறையின் 397 குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத் துறையின் 115 குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.

‘பிபா்ஜாய்’ புயலை எதிா்கொள்வதற்காக முப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் பிபா்ஜாய் அதிக சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; மிக கனமழை பெய்யும் என்றும், புயல்தாக்கம் காரணமாக, கட்ச் கடற்கரை பகுதியில் 2 முதல் 3 மீட்டர் உரத்திற்கு அலைகள் எழலாம், போர்பந்தர் மற்றும் துவாரகாவில் கடும் சூறாவளியுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com