கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

9 லட்சத்தைக் கடந்த ரெனோ காா் விற்பனை

 பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமான ரெனோ, இந்தியாவில் விற்பனை செய்துள்ள காா்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2023, 7:05 pm

DIN

 பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமான ரெனோ, இந்தியாவில் விற்பனை செய்துள்ள காா்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் விற்பனையாகியுள்ள ரெனோ காா்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகளவில் ரெனோ குழுமத்தின் மிகப் பெரிய ஐந்து சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

இந்தியாவுக்கு ஏற்ற வகையில் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலேயே காா்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் ரெனோ, தற்போது இங்கு ஆரம்ப நிலைப் பிரிவில் க்விட், சிறிய ரக எஸ்யுவி பிரிவில் கிகொ், பல்நோக்கு வாகனப் பிரிவில் ட்ரிபா் ஆகிய காா் ரகங்களை விற்பனை செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.