/

நீட் தேர்வில் தோல்வியால் ராஜஸ்தானில் மாணவர் தற்கொலை

நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்ததால் கோட்டாவில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 7:08 pm

DIN

நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்ததால் கோட்டாவில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

பாதிக்கப்பட்ட 21 வயதான ரோஷன், பிகாரில் உள்ள சமஸ்திபூரில் இருந்து படிப்பதற்காக வந்து கோட்டாவின் மஹாவீர் நகர் பகுதியில் வசித்து வந்தார். அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று அவர் தோல்வியடைந்தார். வியாழக்கிழமை காலை, தில்லியில் இருந்து கோட்டாவுக்குத் திரும்பிய அவர், தற்கொலை செய்து கொண்டார். கோட்டாவுக்குத் திரும்பிய பிறகு ரோஷன் தனது மொபைல் போனை எடுக்கவில்லை.
 
எனவே அவரது தம்பி சுமனைச் சென்று பார்க்கும்படி வீட்டில் கூறியிருக்கிறார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுமனும் கோட்டாவில் வேறு இடத்தில் தங்கியிருந்தார். வியாழன் மாலை சுமார் 7 மணியளவில் சுமன் ரோஷனின் வீட்டிற்குச் சென்றபோது, ​​அவரது சகோதரர் தூக்கில் தொங்குவதைக் கண்டார். உடனே ரோஷனை மீட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும் அவர்கள் தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றவில்லை. ரோஷன் 2022 முதல் கோட்டாவில் வசித்து வந்திருக்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வுக்கு முயன்று தோல்வியடைந்தார். வியாழக்கிழமை காலை 10 மணியளவில் ரோஷன் தனது தாயிடம் கடைசியாக பேசியதாக அவரது மாமா ராஜ்கிஷோர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.