ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குஜராத்: புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் அமித்ஷா

குஜராத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் ஹெலிகாப்டரில் சென்று அமித்ஷா பார்வையிட்டார்.

News image
Updated On :17 ஜூன் 2023, 11:45 am

DIN

குஜராத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் ஹெலிகாப்டரில் சென்று அமித்ஷா பார்வையிட்டார்.

குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை இரவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் பலத்த மழையும் பெய்தது. புயலின் தாக்கத்தால், கட்ச்-செளராஷ்டிரா பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மீட்பு-நிவாரண நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

புயலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர்.

23க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். இந்த நிலையில் குஜராத்தில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். 

கட்ச் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரையும் அவர் சந்தித்து பேசினார். முன்னதாக மாணட்வியில் உள்ள மாண்ட்வி சிவில் மருத்துவமனையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களையும் கத்தா கிராம மக்களையும் அமித்ஷா சந்தித்தார். அப்போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.