தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காதலுக்காக கடத்தல் நாடகமாடிய சிறுமி: பெற்றோர்கள் அதிர்ச்சி!

மகாராஷ்டிர மாநிலத்தில் காதலருடன் சென்றுவிட்டு கடத்தப்பட்டதாக சிறுமி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 ஜூன் 2023, 9:50 am

DIN

பால்கர்: மகாராஷ்டிர மாநிலத்தில் காதலருடன் சென்றுவிட்டு கடத்தப்பட்டதாக சிறுமி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் குடியிருக்கும் 17 வயது சிறுமி, ஒரு கம்பெனியின் பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை வேலைக்கு என்ற சிறுமி மாலை வீடு திரும்பவில்லை.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருக்கும்போது, தான் கடத்தப்பட்டதாக சகோதரரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அச்சிறுமி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் விரார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தியதில், அச்சிறுமி தனது ஆண் நண்பருடன் கொல்கத்தாவுக்கு விமானத்தில் சென்றது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சிறுமி மற்றும் அவரின் ஆண் நண்பரை பிடிப்பதற்காக காவல்துறையினர் கொல்கத்தா விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.